பிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்

பிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டின் மீனவர்கள் அவ்வப்போது மோதிக்கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில் நேற்று மீண்டும் இருநாட்டு மீனவர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி இங்கிலாந்து கடற்பரப்பில் 12 நாட்டிகல் மைல் தொலைவு வரை மீன்பிடிக்க பிரான்ஸ் மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில மீனவர்கள் அனுமதியின்றி கூடுதல் தொலைவு செல்வதால் இருதரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரான்ஸ் மீனவர் ஒருவர் இங்கிலாந்து கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அவரை இங்கிலாந்து மீனவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது படகுகளை சேதப்படுத்திய மீனவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply