பிராமணர் காலடியில் சரணடைந்தாரா முக ஸ்டாலின்? பாஜக கேள்வி

பிராமணர் காலடியில் சரணடைந்தாரா முக ஸ்டாலின்? பாஜக கேள்வி

வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து சந்திக்க இருப்பதாக நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கையை பின்பற்றி வரும் திமுக தனது தொண்டர்களை நம்பாமல் பிரசாந்த் கிஷொரை நம்பி தேர்தலில் களமிறங்குவதா? என திமுக தொண்டர்களே அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிராமணர்களை துவேஷப்படுத்தியே கட்சியை நடத்திவரும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது பிராமணர் காலடியிலேயே சரண் அடைந்து விட்டாரா? என்ற கேள்வியை பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்து விரோத கொள்கை, பிரிவினைவாதம், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என பல பேர்பெற்ற தலைவர்களால் கட்டமைக்கபட்ட அறிவாலயம், ஒரு சர்வாதிகாரியாக முக ஸ்டாலின் இருந்தும் கட்டுப்படுத்த வழியின்றி புதிய முயற்சியாய் பிராமணர் பிகேயார் காலடியில் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கை தான் காரணமா? என்று குறிப்பிட்டுள்ளது

Leave a Reply