பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கர்ப்பம்: இன்னொரு வாரிசு உருவாகிறது
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் ஹாரிக்கும் மேகன் மார்கலுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது மேகன் மார்கல் கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு வரும் வசந்தகாலத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேகன் மார்கல் கருவுற்றிருப்பதை பிரிட்டன் அரண்மனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் குட்டி இளவரசரை வரவேற்க அரண்மனையில் உள்ளவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
தற்போது ஹாரி – மேகன் மார்கல் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணத்தை முடித்த பின்னர் அவர்கள் பிஜி தீவுக்கும் செல்லவுள்ளதாகவும் அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன