பிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி

பிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி

உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ராவில் சொத்து தகராறில் நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்து. இதனை தொடர்ந்து பிரியங்கா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து பிரியங்கா கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, சோன்பத்ரா சொத்து தகராறில் இறந்தவரக்ளின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும், தன்னோடு 4 பேரை மட்டுமே அழைத்து செல்ல அனுமதி கேட்டதாக கூறினார். ஆனாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறினார். இந்த நிலையில், ஏன் அவர்களை பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறிய பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்டோரை பார்க்க அனுமதிக்கும் வரை இங்கு அமைதியாக தர்ணா போராட்டம் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சோன்பத்ரா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply