பிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு
தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரமணியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் தமிழ், தெலுங்கு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ காட்சியை சமீபத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமார் யூடியூபில் பார்த்துள்ளார். சீமானின் இந்த பேச்சூ இரு சமூகத்தினரிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் பேசியதாக கருதிய அவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (1)(a) – ன் (இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.