பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று நடந்த போட்டியில் ரோஜர் ஃபெடரர் நான்காவது சுற்று முடிந்தவுடன் உடல்நிலை காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இனிவரும் போட்டிகளிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார்.
நேற்றைய போட்டிக்குப் பின் தனது உடல்நிலை போட்டிக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், அதனால் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை நவோமி ஒசாகா உள்பட ஒருசிலர் விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.