பிறந்த நாளில் கிட்னி உள்பட உடலுறுப்புகளை தானமாக கொடுத்த எம்.எல்.ஏ

பிறந்த நாளில் கிட்னி உள்பட உடலுறுப்புகளை தானமாக கொடுத்த எம்.எல்.ஏ

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ மரியானி என்பவர் சமீபத்தில் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாளை அவர் ஆடம்பரமாக கொண்டாட விரும்பாமல் எளிய முறையில் கொண்டாடி விட்டு ஒரு சாதனை நிகழ்ச்சியை செய்துள்ளார்

பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு நேராக மருத்துவமனை சென்ற எம்எல்ஏ தனது உடலில் உள்ள கிட்னி, லிவர், கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினார். அதுமட்டுமின்றி மருத்துவமனை செயல்பாட்டிற்காக ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்குவதற்காக தனது சம்பளத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியாக கொடுத்துள்ளார்

உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் மட்டும் போதாது அந்த உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் அவசியம் என்பதால் இந்த பணத்தை நிதியாக கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்

இவரை பின்பற்றி இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்களுடைய பிறந்தநாளின்போது இதேபோன்று உடலுறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது

Leave a Reply