பில் வாங்குங்கள்: பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரி வலியுறுத்தல்
பொதுமக்கள் ரூ.200 மேல் பொருட்க்ள் வாங்கினால் அவசியம் ‘பில்’ கேட்டு வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கும், பில் கட்டாயம் வழங்க வேண்டும்’ என, வணிகர்களுக்கும், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: வாடிக்கையாளர் செலுத்தும், ஜி.எஸ்.டி.,யை, வணிகர்கள், அரசுக்கு முறையாக செலுத்த வேண்டும். பல வணிகர்கள் செலுத்தாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வாடிக்கையாளர், 200 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால், அவர்களுக்கு, வணிகர்கள் கண்டிப்பாக, ‘பில்’ வழங்க வேண்டும்.
வணிகர்கள் பில் தராவிட்டால், வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.