பிளஸ் 2 தேர்வு முடிவு: முதலிடைத்தை கைப்பற்றி விருதுநகர் மாவட்டம்
இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் 91.1 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம், 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், ஜூன் 25ல் மீண்டும் தேர்வெழுதலாம். தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது. மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.