பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் தடுப்பூசி போட முடியாது: ஏன் என மருத்துவர்கள் விளக்கம்

பிளஸ் 2 தேர்வு எழுதப் புகும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

தற்போது பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் 18 வயது வந்தவர்களுக்கு மட்டுமே போட முடியும் என்றும் பிளஸ் டூ மாணவர்கள் பெரும்பாலும் 18 வயதுக்கு உள்ளவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இந்த ஊசியை பயன்படுத்தும் உரிமை இன்னும் பெறவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்

எனவே பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்