பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க ஆஸ்திரேலியாவின் புதிய திட்டம்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக அதன் கழிவுகளால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக விலங்குகள் தெரியாமல் பிளாஸ்டிக்கை உண்பதால் பல சமயம் உயிர் இழக்கவும் நேரிடுகிறது
இந்த நிலையில் பிளாஸ்டிக்கை பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க ஆஸ்திரேலியா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி ஆறு, அணைகள், ஏரி, குளம், ஆகியவற்றில் இருந்துநீர் வெளியேறும் போது அதை வெளியேற்றும் குழாயில் ஒரு பெரிய வலை ஒன்றை கட்டி உள்ளனர். இந்த வலையில் பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கி, தண்ணீர் மட்டும் வெளியேறுகிறது இதனை அவ்வப்போது சுத்தப்படுத்தி வருவதால் பிளாஸ்டிக் கழிவுகள் குறைந்த செலவில் சேகரிக்கப்பட்டு கொள்வதோடு மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் உள்ளது
இந்த முறையை இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்