பி.டெக்., உயிரியல் பாடப் பிரிவுகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பி.டெக்., உயிரியல் பாடப் பிரிவுகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

புதுவையில் பி.டெக், பி.பார்ம், பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளுக்கான சென்டாக் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
புதுவையில் அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள பாடப் பிரிவுகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம் மற்றும் பி.ஏ., எல்.எல்.பி. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கடந்த ஜூலை 3-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 8-ஆம் தேதி பி.டெக்., பி.பார்ம், பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளுக்கான வரைவு தரவரிசைப் பட்டியல் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, ஆட்சேபனைகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் வரைவு தரவரிசைப் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து, சனிக்கிழமை பி.டெக்., பி.பார்ம், பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளுக்கான (கால்நடை மருத்துவம், நர்சிங், பிபிடி, பி.எஸ்சி., எம்.எல்.டி., பி.எஸ்.சி., எம்ஆர்ஐடி, டிப்ளமோ இன் ஏபிடி) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுவை மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பி.டெக் – 3,644 பேரும், உயிரியல் பாடப் பிரிவு – 3,453 பேரும், பி.டெக். (ஜெஇஇ மதிப்பெண்கள்) – 415 பேரும், பி.பார்ம் – 2,783 பேரும், பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை – 2,588 பேரும் இடம் பெற்றுள்ளனர். இதேபோல, பிற மாநிலத்தவருக்கான பட்டியலில் பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை – 1877 பேரும், பி.டெக். (ஜேஇஇ மதிப்பெண்கள்) – 819 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், பொறியியல் பாடப்பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில் மாணவர் சந்திர திலக் (200) முதலிடத்தையும், ஸ்ரீராக் (200) 2-ஆவது இடத்தையும், ஸ்ரீஜா (199.556) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர். உயிரியல் பாடப் பிரிவில் சந்திர திலக் (200), மவுனிகா லாட் (200), நவ்யா வெங்கட சாய்லட்சுமி (198.888) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.
டிப்ளமோ படிப்புகளுக்கு தரவரிசை வெளியீடு: புதுவை மாநிலத்தில் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட 6 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,432 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான வரைவு தரவரிசைப் பட்டியல் ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, ஆட்சேபனைகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் திருப்பம் செய்யப்பட்டது. இதையடுத்து, இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுவை மாநிலத்துக்கான தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 1,144 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஓபிசி – 365 பேர், எம்பிசி – 311 பேர், எஸ்சி – 221 பேர், இபிசி – 58 பேர், பிசிஎம் – 53 பேர், எஸ்டி- 2 பேர், பிடி – ஒருவர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் – 3 பேர், மாற்றுத் திறனாளிகள் – 7 பேர், பிற மாநிலத்தவர் – 289 பேர் என பிரிவு வாரியாகவும் பட்டியல் வெளியிடப்பட்டது.

Leave a Reply