புகழேந்தியை அடுத்து வருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக் ஆஜர்
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 9ஆம் தேதி அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து செய்தனர். இந்த சோதனை ஒருசில இடங்களில் இன்றும் தொடர்ந்து வரும் நிலையில் சற்றுமுன்னர் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ஆஜரானார்.
இதனையடுத்து சென்னை வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்தில் மருத்துவர் சிவக்குமார் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருடைய வீடு மற்றும் அலுவலகம், ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் சசிகலா சகோதரர் திவாகரனும் நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.