புதினா பொட்டுக்கடலை டோக்ளா
என்னென்ன தேவை?
பொட்டுக்கடலை ஒரு கப்
புதினா சிறிதளவு
சீரகம் அரை டீஸ்பூன்
இஞ்சி சிறிய துண்டு
சோம்புத் தூள் அரை டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் சிறிதளவு
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை சிறிதளவு
எலுமிச்சை சாறு கால் டீஸ்பூன்
கடுகு கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பொட்டுக்கடலையைப் பத்து நிமிடங்கள் ஊறவையுங்கள். ஊறியதும் அதனுடன் புதினா, சீரகம், இஞ்சி, உப்பு சேர்த்து சற்றுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து இட்லி தட்டில் வைத்து வேகவையுங்கள்.
ஆறியதும் துண்டுகளாக் வெட்டுக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெட்டி வைத்திருக்கும் துண்டுகளைச் சேர்த்து சோம்புத் தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து மெதுவாகக் கிளறி இறக்கிவையுங்கள்.