புதினுடன் ரகசியமாக பேசியது உண்மைதான்: டிரம்ப்

புதினுடன் ரகசியமாக பேசியது உண்மைதான்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதை ஒப்புக்கொண்டு அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘ரஷ்ய அதிபருடனான ரகசிய பேச்சுவார்த்தை ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை. நான் எதையும் உள்ளே வைத்து மூடி மறைக்கவில்லை. நான் புதினுடன் மட்டுமின்றி அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் தனியாக தான் பேச்சுவார்த்தை நடத்துவேன். பிரதிநிதிகள் யாரும் உடன் இருக்கமாட்டார்கள். அது பற்றி யாரும், எதுவும் கூறியது கிடையாது. ரஷியாவுடன் எந்த வித கூட்டணியும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக அதிபர் டிரம்ப், கடந்த 2 ஆண்டுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை தனது நிர்வாகத்திடம் மூடி மறைத்துவிட்டதாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply