யார் தெரியுமா?
இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்
இதனை அடுத்து அவரது இடத்திற்கு தற்போது புதிய அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இம்மாதம் 31-ம் தேதியுடன் தேர்தல் கமிஷன் பணியில் இருந்து அசோக் லவாசா வெளியேறுவதை அடுத்து ராஜீவ்குமார் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தனது புதிய பதவியை ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ்குமார் கடந்த 1984ஆம் ஆண்டு ஐஏஎஸ் படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது