புதிய தேசிய கல்விக்கொள்கை: நவம்பர் 11ல் வெளியீடு
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை சமீபத்தில் அறிமுகம் செய்து அதன் வரைவு திட்டத்தையும் இணையத்தில் பதிவு செய்து பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது
இந்த நிலையில் புதிய தேசிய கல்வி கொள்கை வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியிடவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை இந்த மாதம் இறுதியில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு திமுக உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்பதும், சமீபத்தில் புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தான் பாதிக்கப்படுவர் என்றும், புதிய தேசிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வராமல் இருக்க எல்லா முயற்சியையும் மேற்கொள்வோம் என்று திமுக எம்பி திருச்சி சிவா கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது