புதிய தேர்வு முறை: அண்ணா பல்கலை முடிவை எதிர்த்து மாணவர்கள் வழக்கு
தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய நடைமுறையை எதிர்த்து நாமக்கல் தனியார் கல்லூரி மாணவர்கள் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ‘தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.