புதிய பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, நான் தான் பிரதமர் என அறிவித்த ரணில்: இலங்கையில் அரசியல் குழப்பம்

புதிய பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, நான் தான் பிரதமர் என அறிவித்த ரணில்: இலங்கையில் அரசியல் குழப்பம்

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் அதிபர் ராஜபக்சே நேற்று பிரதமராக பதவியேற்றார். அதிபர் மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டதும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஆனால் ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்றும் அவரது நியமனம் ஜனநாயக படுகொலை என்றும் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பதாகவும், அவரை பதவி நீக்க செய்ய அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இன்று கொழும்பில் போராட்டம் நடத்த வருமாறு தொண்டர்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் 19-ஆவது விதிகளின்படி, அந்நாட்டின் பிரதமரை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவின்றி நீக்க முடியாது. அதன்படி பார்க்கும்போது, தற்போது விக்ரமசிங்கேவை தன்னிச்சையாக சிறிசேனா மாற்றியிருப்பது செல்லாது என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply