புதுவை 144 தடை உத்தரவால் வாக்குப்பதிவு பாதிக்குமா?

புதுவையில் சமீபத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது என புதுவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரியும் கலெக்டருமான பூர்வா கார்க் இது குறித்து விளக்கமளிக்கையில் மக்கள் கூட்டமாக சென்று வாக்கு அளிக்கலாம் என்றும் குடும்பமாகவும் நண்பர்கள் சகிதமாக வாக்களிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்

மேலும் திருமண நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் 144 தடை உத்தரவை வாபஸ் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply