புது நுட்பம்: வி சார்ஜ்

எதிர்காலத்தில் புகையில்லா உலகை உருவாக்க வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மாற்று தொழில்நுட்பத்தில் வாகனங்களை தயாரிக்க தொடங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக பேட்டரிகள் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் இப்போதே சந்தையில் வரத்தொடங்கிவிட்டன. பேட்டரி வாகனங்கள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் எதிர்கொள்ளப்போகிற சிக்கல் இதற்கு சார்ஜ் ஏற்றுவதாகத்தான் இருக்கும். இதற்கு தீர்வு சொல்கிறது வி சார்ஜ் தொழில்நுட்பம். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதுபோல, வி சார்ஜ் பாயிண்டுகளை பல இடங்களில் நிறுவுவதன் மூலம் வாகன பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் எந்த துறையிலும் ஆற்றலோடு வளர அவர்கள் சொந்தமாக கற்றுக் கொள்வது அவசியமாகிறது. தொழில்நுட்ப பயிற்சிகளும் கற்றுக்கொள்வதன் மூலம்தான் உருவாகிறது என்று சொல்லும் திம்பில் (Thimble) என்கிற நிறுவனம், குழந்தைகளுக்காக மாதந்தோறும் பயிற்சி உபகரணங்களை வழங்கும் திட்டத்தை முன் வைக்கிறது. ஒரு எலெக்ட்ரானிக் பொம்மையோ, விளையாட்டு சாதனத்தையோ குழந்தைகள் தானாகவே உருவாக்கும் விதமாக, அதற்குத் தேவையான அனைத்தையும் ஒரு பெட்டியில் கொடுத்து விடுகின்றனர். உருவாக்கும் விதத்தை ஆப்ஸ் மூலம் அனுப்பி வைத்து விடுவார்கள்.

சிறிய எல்இடி

led

உலகத்தின் மிகச் சிறிய எல்இடி இது. துப்பாக்கி தோட்டா அளவில் இருக்கும் இதன் நீளம் 30 மில்லிமீட்டர். 6 கிராம் எடை கொண்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் என்று கூறியுள்ளது இதைத் தயாரித்த நிறுவனம்.

மின் தூக்கி

காடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த இந்த கருவி வகை செய்கிறது. இதில் உள்ள சக்கரங்கள் செங்குத்தான மரங்களிலும் ஏறும். செல்போன் மூலம் இயக்கும் விதமாக வடிவமைக்கபட்டுள்ளது.

உடனடி ஐஸ்கிரீம்

இந்த இயந்திரத்தின் மூலம் வீட்டிலேயே 30 நிமிடத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்கலாம். விரும்பிய வகைகளை கூழ் பதத்தில் இந்த இயந்திரத்தில் ஊற்றி ப்ரீசரில் வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் தயாராகிவிடும்.

Leave a Reply