புத்தபிக்குகள் உண்ணாவிரதம் எதிரொலி: 9 முஸ்லீம் அமைச்சர்கள் ராஜினாமா
முஸ்லீம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி புத்தபிக்குகள் உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து இலங்கை அமைச்சரவையில் உள்ள 9 முஸ்லீம் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் கேபினட் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் கடந்த் ஈஸ்டர் தினத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகளுடன் சில அமைச்சர்களுககு தொடர்பு இருப்பதாக புத்த பிக்குகள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து ஒருசில அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி அவர்க்ள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இலங்கையின் 9 அமைச்சர்களும் ராஜினாமா செய்ததோடு, ‘தங்கள் மீது தவறு இருந்தால் எந்த தண்டனைக்கும் தயார் என்றும், அப்பாவி முஸ்லீம்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் மீது துவேசம் காட்டப்படுவதாகவும் தெரிவித்தனர்