புரோ கபடி இறுதி போட்டி: பாட்னா-குஜராத் அணிகள் சென்னையில் மோதல்

புரோ கபடி இறுதி போட்டி: பாட்னா-குஜராத் அணிகள் சென்னையில் மோதல்

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த புரோ கபடி போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நாளை சென்னையில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் பாட்னா-குஜராத் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், புனேரி புல்தான், அரியானா ஸ்டீரியர்ட்ஸ், யூ மும்பை, ஜெய்ப்பூர் பிங்க் பான்டர்ஸ், தபாஸ் டெல்லி ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் அறிமுக அணியான தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியாஸ், பாட்னா பைரட்ஸ், உ.பி.யோத்தா, பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் என்ற 12 அணிகள் கலந்து கொண்ட இந்த புரோ கபடி போட்டியில் ஏ பிரிவில் குஜராத், புனே, அரியானா ‘பி’ பிரிவில் பெங்கால், பாட்னா, உ.பி.யோத்தா ஆகிய 6 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதன் பின்னர் நடைபெற்ற தகுதிச்சுற்றில் குஜராத் மற்றும் பாட்னா அதிக புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள பாட்னா இன்றும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply