புற்றுநோயை உருவாக்கும் மாமிசம்
கடந்த 20 வருடங்களில் நமது உணவு முறையில் பெரிய மற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமைத்து உண்ணாமல் உணவகங்களுக்கு செல்லும் போக்கு அதிகமாகியுள்ளது. வீட்டிலும் கூட ப்ரஷ் ஆன, காய்கறி மாமிசங்களை பயன்படுத்துவதை விட ப்ரிஜில் வைத்து நாட்கணக்கில் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டது.
இப்படி நாட்கணக்கில் உணவுப் பொருட்களை வைத்து பயன்படுத்துவதற்காகவே பெரும் நிறுவனங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இப்போது பதப்படுத்தப்பட்ட மாமிசமும் இந்தியாவிற்கு வரத்தொடங்கிவிட்டது.
அதிலும் மாட்டிறைச்சி, பன்றி மாமிசம், இஞ்சி, பூண்டு கொண்டு தயாரிக்கப்பட்ட இன்னும் சில உணவுகள் போன்றவைகள் கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
இவை தான் இப்போது கெடுதலை தருகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவை 150 கிராம் உண்டால் அது 34 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமம் என்கிறது ஆய்வு.
இந்த ரசாயனத்தில் உள்ள ‘நைட்ரெட்‘ என்ற பொருள்தான் உணவுகளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. இதில் ‘கார்சிநோஜென்‘ என்ற புற்றுநோயை உருவாக்கும் பொருள் அதிக அளவில் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் உள்ளது. இது மனித ஆரோக்கியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இதனால் வளர்ந்த நாடுகள் பல இந்த உணவுகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்தியா போன்ற சில நாடுகள் மட்டும் தடை விதிக்காமல் இருக்கின்ற காரணத்தால், அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் சந்தைப்படுத்தப்படுகின்றன. மற்ற நோய்களைக் கூட சுலபமாக கண்டறிந்துவிடலாம். புற்றுநோயை கண்டுபிடிப்பது கடினம். முற்றிய நிலையில்தான் பாதிப்பு தெரிய தொடங்கும். தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை சாப்பிட்டாலே இந்த பாதிப்பு ஏற்படும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட மாமிசத்தையும், உணவுகளையும் ஒதுக்குங்கள் என்கிறார்கள், மருத்துவர்கள்.