புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி சுட்டுக்கொலை

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி சுட்டுக்கொலை

கடந்த மாதம் காஷ்மீர் மாநில புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பின் இந்திய பாகிஸ்தான் உறவு முற்றிலும் சிதைந்துள்ள நிலையில் தற்போது புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி முத்சார் அகமது கான் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இன்று நடைபெற்ற துப்பாக்கி சண்டை ஒன்றில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை ட்ரால் அருகே பிங்லிஸ் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply