புளூடூத் ஸ்பீக்கர் வாங்க போறீங்களா? அப்ப இதை படியுங்கள்
மொபைல்ல பாட்டு கேட்கும்போது ஸ்பீக்கர்ல இருந்து வர்ற சவுண்ட் போதாதுனு நினைக்குறவங்களுக்கு இருக்குற ஒரே சாய்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள். எந்த இடத்துக்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும், அருமையான இசையைப் பெற முடியும் என்பது ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் பிளஸ். தற்பொழுது சந்தையில் கிடைக்கும் சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் சில…
ஆயிரம் ரூபாய்க்கு கீழே கிடைக்கும் சிறந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் இதுவும் ஒன்று. இதில் இருக்கும் 400mAh பேட்டரி மூலமாக 3 மணி நேரத்திற்குப் பாடல்களை கேட்க முடியும். ஒரு கையில் எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பில்ட்இன் மைக்ரோபோன் இருப்பதால் மொபைலுக்கு வரும் அழைப்புகளைத் தவிர்க்காமல் பேசலாம். வாட்டர் ஃப்ரூப் வசதி இல்லாதது இதன் மைனஸ். விலை 790 ரூபாய்.
இதில் இருக்கும் இரண்டு 6 வாட் ஸ்பீக்கர்கள் சிறந்த ஆடியோ அவுட்புட்டை அளிக்கின்றன. ப்ளூடூத் 3.0 வசதி இருப்பதால் 10 மீட்டர் சுற்றளவு வரை கவரேஜ் கிடைக்கும் . 1000mAh பேட்டரி குறைந்தபட்சமாக 10 நேர செயல்பாட்டிற்கு தேவையான மின்சக்தியை அளிக்கிறது. 3.5mm கேபிள் மூலமாக ப்ளூடூத் இல்லாமலும் இதைப் பயன்படுத்த முடியும். அழைப்புகளை மேற்கொள்ள எதுவாக பில்ட்இன் மைக்ரோபோன் இருக்கிறது. வாட்டர் ஃப்ரூப் வசதி, மற்றும் USB வசதி இல்லாதது இதன் மைனஸ்கள். விலை 1,399 ரூபாய்.
வீட்டை விட வெளியிடங்களில் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இதை தேர்ந்தெடுக்கலாம். IPX5 வாட்டர்ஃப்ரூப் வசதியைக் கொண்டிருக்கும் இது நீரால் பாதிப்படையாமல் இருக்கும். கீழே விழுந்தாலும் எளிதில் உடையாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1500 mAh பேட்டரி 8 மணி நேரத்திற்கு தேவையான மின்சக்தியை அளிக்கும். USB வசதி இல்லாதது, சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் ஆகும் போன்றவை இதன் மைனஸ்கள். விலை 1299 ரூபாய்.
கையடக்க வடிவில் இருக்கும் இது எங்கும் எடுத்துசெல்வதற்கு எளிதாக இருக்கும். அளவில் சிறியதாக இருந்தாலும் இதில் இருந்து வெளியாகும் ஆடியோ அவுட்புட்டில் குறை இருக்காது. ப்ளூடூத் 4.1 மற்றும் A2DP வசதி இருப்பதால் ஆடியோ குவாலிட்டி சிறப்பாக இருக்கும். இதில் இருக்கும் 750mAh பேட்டரி மூலமாக 5 மணி நேரத்திற்கு இயங்கும் திறனை இது பெற்றிருக்கிறது. இதில் மோனோ ஸ்பீக்கர் அமைப்பு இருக்கிறது. இதன் கவரேஜ் தொலைவு 10 மீட்டர். விலை 1,504 ரூபாய்.
இதன் வெளிப்புறம் அலுமினியம் உலோகத்தால் ஆனது. எனவே அழகாக தோற்றமளிக்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இதில் இருக்கும் டூயல் ஸ்பீக்கர் அமைப்புகளால் சிறந்த ஆடியோ அவுட்புட்டைப் பெற முடிகிறது. இதில் இருப்பது ப்ளூடூத் 4.2 என்பதால் இதன் கவரேஜ் பரப்பு அதிகம். அதிகபட்சமாக 50 மீட்டர் அளவிலான சுற்றளவில் இருந்து இந்த ஸ்பீக்கரை பயன்படுத்த முடியும். USB,வாட்டர்ஃப்ரூப் வசதி இல்லாதது இதன் மைனஸ். விலை 1,799 ரூபாய்.
ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வாங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
வாட்டர்ஃப்ரூப் வசதி இருக்கும் ஸ்பீக்கர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. வெளியிடங்களில் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
மோனோ ஸ்பீக்கர் அமைப்பை கொண்டவை கையடக்கமாக இருந்தாலும் அவற்றால் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அளவிற்கு சவுண்ட் குவாலிட்டியை தர முடியாது. எனவே ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பை கொண்டவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அதன் பேட்டரி திறன். எப்பொழுதும் அதிக பேட்டரி திறன் இருக்கும் ஸ்பீக்கர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. அதேபோல பேட்டரி விரைவாக சார்ஜ் ஏறும் வசதி இருக்குமாறு தேர்ந்தெடுக்கலாம்.
A2DP, NFC, போன்ற வசதிகள் ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் ஆடியோ குவாலிட்டியை அதிகரிக்கும்