பூட்டு போட்டுவிட்டால் அனைத்து பணிகளும் நின்றுவிடுமா? மன்சூர் அலிகான் கேள்வி
விஷால் மீது அதிருப்தி கொண்ட ஒருசில தயாரிப்பாளர்கள் நேற்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். மேலும் இன்று முதல்வர் ஈபிஎஸ் அவர்களை சந்தித்து விஷால் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் உள்ளனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டுவிட்டால் அனைத்து பணிகளும் நின்றுவிடுமா? என்று நடிகரும் விஷால் ஆதரவாளருமான மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தீவிர முயற்சியாக தமிழகம் முழுவதும் டிக்கெட் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.