பூட்டை உடைக்க முயற்சி செய்த விஷால் கைது

பூட்டை உடைக்க முயற்சி செய்த விஷால் கைது

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் விஷால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று தயாரிப்பாளர்கள் சிலர் சங்கத்தின் முன் நின்று விஷாலுக்கு எதிராக கோஷமிட்டு அதன்பின் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகம் வந்த விஷால் பூட்டை உடைக்க முயற்சித்தார். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி அவர் பூட்டை உடைக்க முயன்றதால் அதன் பின் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply