பூண்டு கஞ்சி குடித்தால் வாயுத்தொல்லை பறந்து போய்விடுமாம்

பூண்டு கஞ்சி குடித்தால் வாயுத்தொல்லை பறந்து போய்விடுமாம்

இந்தியாவில் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோய் வாயுத்தொல்லை. இந்த வியாதியை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது பின்னால் பெரிய பிரச்சனையில் கொண்டுபோய் விடும். எனவே இதற்கான எளிய வைத்தியத்தை தற்போது பார்ப்போம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப்
பூண்டு – 150 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு
காய்ச்சிய பால் – 1 கப்

செய்முறை :

அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.

அத்துடன் பூண்டு பற்களை கொட்டி வதக்க வேண்டும்.

பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விட வேண்டும்.

சாதம் நன்றாக வெந்ததும் அதனை மசித்து விட்டு பால் கலந்து பருகவும்.

சூப்பரான பூண்டு கஞ்சி ரெடி.

Leave a Reply