பரபரப்பு தகவல்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் திடீரென ஆயிரக்கணக்கானோர் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்க குவிந்ததால் கொரோனாவின் எண்ணிக்கை குவிந்தது.
இதனால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டை போல் பெங்களூரில் கிருஷ்ணராஜா மார்க்கெட் என்ற மார்க்கெட்டில் சமூக இடைவெளி என்று பொதுமக்கள் குவிந்ததால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இதனை அடுத்து கர்நாடக மாநில அரசு கிருஷ்ணராஜா மார்க்கெட்டை 15 நாட்களுக்கு இழுத்து மூட உத்தரவிட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவதற்கு வழி இல்லாமல் இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளன