பெங்களூருவில் 56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்: கர்நாடக அரசு தலையிட கோரிக்கை
பெங்களூருவில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற் றும் 56,000 ஊழியர்களை சட்டத் துக்கு விரோதமாக வேலை விட்டு நீக்கும் சதி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப ஊழியர் களுக்கான (F.I.T.E) அமைப்பை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் கர்நாடக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரியாங் கார்கேவை சந்தித்து பேசினர். அப்போது, தற்போதைய சூழலில் நாடு முழுவதும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலாளர் நல சட்டத்துக்கு விரோதமாக இந்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் 56,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த சட்ட விரோத சதியை உடனடியாக கர்நாடக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உடனடியாக தலை யிட்டு, 56 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்களை காப்பாற்ற வேண் டும்” என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக கர்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியாங் கார்கே கூறுகையில், “தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்னை சந்தித்து, வேலை இழக்கும் சூழலை விளக்கி னர். தகவல் தொழில்நுட்பத் துறை யினரின் கருத்துக்களையும், நிறு வனங்களின் நிலைப்பாட்டை யும் அறிந்துக்கொண்டேன். இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது. இருப்பினும் ஊழியர்களின் நலனுக்கான முடிவுகளை எடுக்க கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள அனைத்து அமைப்புகளின் கோரிக்கைகளை யும் பரிசீலித்து, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் ஆராய்ந்து, தீர்வு குறித்து ஆலோசிக்கப்படும். விரைவில் அனைத்து ஊழியர்களின் அமைப் புடன் பேசி முடித்தப் பிறகு, பணி பாதுகாப்பு தொடர்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேசப்படும்”என்றார்.
கர்நாடக அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காத தால், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் லட்சக் கணக்கான ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.