பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன்

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தற்கால அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு பின், மேல்முறையீடு இல்லை என்று அறிவித்த டிடிவி தினகரன், 20 தொகுதிகளில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைத்து வருவதாகவும் இதுகுறித்த ஆலோசனைக்காகவே சசிகலாவை அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

சர்கார் விவகாரத்தால் 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை ஊடகங்களும், பொதுமக்களும் மறந்துவிட்ட நிலையில் தற்போது இந்த சந்திப்பின்மூலம் மீண்டும் இந்த விவகாரம் புத்துயிர் பெற்றுள்ளது

 

Leave a Reply