பெங்களூரை அடுத்து பீகார் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் பத்திரிகை உலகம்
பெங்களூரில் பழம்பெரும் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பத்திரிகையாளர் மீண்டு வராத நிலையில் நேற்று பீகார் மாநில பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் அர்வால் என்றா பகுதியில் பத்திரிகையாளரான பங்கஜ் மிஸ்ரா நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள், பங்கஜ் மிஸ்ராவை திடீரென துப்பாக்கியால் சுட்டு அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பணத்திற்காக நடந்ததா? அல்லது பங்கஜ் மீதான முன்விரோதம் காரணமாக நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குண்டடிபட்ட பங்கஜ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் பத்திரிகையாளர்கள் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியான தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் சொந்த பகை காரணமாக நிகழ்ந்துள்ளதாக அர்வால் எஸ்.பி திலிப் குமார் தெரிவித்துள்ளார். பங்கஜ் மிஸ்ரா ராஷ்டிரிய சஹாரா செய்தித்தாளில் பணியாற்றி வருகிறா