பெட்ரோல்-டீசல் வரி குறைப்பு: அருண் ஜெட்லிஅறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகள் குறைத்துக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றால் பெட்ரோல், டீசலின் விலை தினமும் ஏறிக்கொண்டே போகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் ரூ.100ஐ தொட்டுவிடும் நிலை உள்ளது
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைத்துக் கொள்வதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயைக் குறைத்துக் கொள்ளும் என்றும் இதனால் மொத்தத்தில் லிட்டருக்கு இரண்டரை ரூபாய் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மாநில அரசுகளும் மதிப்புக் கூட்டுவரியைக் குறைப்பதன்மூலம் இதே அளவுக்கு விலைக்குறைப்பு அளிக்க வகை செய்ய வேண்டும் என்றும் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.