பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கைகளில் இல்லை: மத்திய அமைச்சர்

பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கைகளில் இல்லை: மத்திய அமைச்சர்

“பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்துவது இந்தியாவின் கைகளில் இல்லை!” என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியவில் பெட்ரோல், டீசலின் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ.90ஐ நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் இதன் விலை ரூ.100ஐ தொட்டுவிடும் என்ற அதிர்ச்சியில் பொதுமக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது வருவதே முக்கியக் காரணம் என்றும், இதனால் மக்கள் பிரச்சினைகளை சந்திப்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யும் ஈரான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள், உற்பத்தியை அதிகரிப்பதாக ஏற்கனவே கூறியும், அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்

Leave a Reply