பெட் வெட்டிங் – தவிர்க்க 10 வழிகள்

பெட் வெட்டிங் – தவிர்க்க 10 வழிகள்

p53aநீர் உறிஞ்சும் விரிப்புகள் (Soggy sheets), போர்வையை விரித்து, டயப்பர் அணிந்துதான் உறங்குகின்றன நிறையக் குழந்தைகள். கொஞ்சம் பெரிய குழந்தை உள்ள வீடுகளில், ‘இந்த வயசிலேயும் பெட்ல யூரின் போறயே’ எனக் காலையிலேயே சத்தம்போட்டுக்கொண்டிருப்பார் அம்மா. “என் பையனுக்கு ஆறு வயசாகிடுச்சு, இன்னும் பெட்லேயே யூரின் போயிடுறான்… அன்பா சொல்லியாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு ஒண்ணும் செய்ய முடியலை” என்று புலம்பும் பெற்றோர்கள் உண்டு. படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது, பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் ஒரு சாதாரண நிலைதான். பெரியவர்களுக்கு சில நோய்க் காரணிகளாலும், வயது முதிர்ச்சியாலும் இது ஏற்படும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை, நைட் டைம் இன்கான்டினென்ஸ் (Night time incontinence) அல்லது நாக்டர்னல் எனுரீசிஸ் (Nocturnal enuresis) என்பார்கள்.

தூக்கத்தில் தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிப்பதைத்தான் பெட் வெட்டிங் என்கிறோம். இது, எல்லா வயதிலும் ஏற்படக்கூடிய ஒன்று. என்றாலும், சிறு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமே அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் வேறுபடும்.

சிறுநீர் வெளியேறும் அறிவியல்

நம் சிறுநீரகத்தில் இருந்து சிறு குழாய்கள் வழியே சிறுநீரானது சிறுநீர்ப்பையை வந்தடைகிறது. அது நிறைந்ததும் மூளைக்குத் தகவல் செல்கிறது. மூளை, சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பிறகே சிறுநீர் வெளியேறுகிறது. இந்த சிறுநீர்ப்பையானது இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தன்னிச்சையாகச் செயல்படும். சிறுநீர் மெதுவாக சிறுநீர்ப்பையில் வந்து சேர்ந்தவுடன், தானாகவே சிறுநீர்ப்பை சுருங்கி, சிறுநீரை வெளியேற்றும். பின், வயது அதிகரிக்கும்போது இதன் கட்டுப்பாட்டை மூளை எடுத்துக்கொள்ளும். இந்தச் செயல்பாடு மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகே, குழந்தைகளுக்குத் தாங்கள் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையைச் சொல்வார்கள். இவ்வாறு, பழக்கப்படுத்துவதையே கழிப்பறைப் பயிற்சி (டாய்லெட் ட்ரைனிங்) என்கிறோம்.

கழிப்பறைப் பயிற்சியை சில குழந்தைகள் மூன்று முதல் ஐந்து வயதுக்குள் பழகிக்கொள்வார்கள். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள். அதேபோல, பகலில் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும்போது சொல்வார்கள். ஐந்து வயது முதல் ஏழு வயது வரை உள்ள 90 சதவிகிதக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இல்லை. ஏழு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதையே நாம் பெட் வெட்டிங் என்கிறோம்.

பெட் வெட்டிங் காரணங்கள்

பொதுவாக, குழந்தைகளுக்கு இட மாற்றம் ஏற்படும்போது அதாவது, பள்ளி, வசிப்பிடம் மாறும்போது, புதிய இடம், அறிமுகம் இல்லாத ஆட்கள், புதிய சூழலால் மனஅழுத்தத்துக்கு ஆளாவார்கள். இது ஒரு முக்கியமான காரணம். சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல், சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள். பிறவியிலேயே சிறுநீர்ப்பை சுருங்கி இருப்பதே இதற்குக் காரணம். இதனாலும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும். மேலும், மலச்சிக்கல், சிறுநீர்ப்பைத் தொற்று, சிறுநீர்ப்பை நிறைந்ததை உணர முடியாத நிலை, ஹார்மோன் சமச்சீரின்மை, ஸ்லீப் ஆப்னியா, டான்சிலைடிஸ், சிறுநீர்ப்பாதை மற்றும் நரம்பு மண்டல அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும்.

சிகிச்சை உள்ளதா?

குழந்தை அடிக்கடி பெட் வெட்டிங் செய்கிறது என்றால், குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது நல்லது. இவர்களுக்கு சிறுநீர்ப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மற்றும் உளவியல் பரிசோதனை செய்யப்படும். 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், உணவுப் பழக்கத்தில் சிறிய மாறுதல் செய்தாலே போதும். இதனுடன், இரவு தூங்கச் செல்லும் முன்பு, சிறுநீர் கழித்துவிட்டு தூங்கும் பழக்கம், இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கும் பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். மேலும், குழந்தைகள் வளர வளர இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும். இதற்குப் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இது குழந்தைகள் தங்களை அறியாமல் செய்வது என்பதால், அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ கூடாது. அவர்களைப் புரிந்துகொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டும். திட்டுவதாலோ அடிப்பதாலோ இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியாது. இது, பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.

பெரியவர்களுக்கு ஏற்படும் பிரச்னை

சிலருக்கு, டீன் வயதுக்கு முந்தையப் பருவத்தில் இந்தப் பிரச்னை திடீனெத் தோன்றும். அதாவது, ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் வாழும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்குத் தோன்றும். முதியவர்களில் ஆண்களுக்கு பெட்வெட்டிங் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 50 – 60 வயதில் இந்தத் தொந்தரவு ஏற்பட்டால், ப்ராஸ்டேட் பிரச்னையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி சிறுநீர்பைக்கு கீழ் அமைந்திருக்கிறது. இதன் மையத்தில் சிறுநீர்க் குழாய் இருக்கிறது. ப்ராஸ்டேட் அளவு பெரிதாகும்போது, குழாய் சுருக்கம் அடையும். இதனால், சிறுநீர்ப் பாதையில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்ப்பையில் தேக்கம் ஏற்படும். இவ்வாறு வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் தேங்குவதால் தொற்று ஏற்படும். அதனால், அவர்களையும் அறியாமல் தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் கற்கள் தோன்றும். இதற்கு நவீன சிகிச்சைகள், தீர்வுகள் உள்ளன என்பதால் கவலைப்படத் தேவை இல்லை.

– பி.கமலாநீ ர் உறிஞ்சும் விரிப்புகள் (Soggy sheets), போர்வையை விரித்து, டயப்பர் அணிந்துதான் உறங்குகின்றன நிறையக் குழந்தைகள். கொஞ்சம் பெரிய குழந்தை உள்ள வீடுகளில், ‘இந்த வயசிலேயும் பெட்ல யூரின் போறயே’ எனக் காலையிலேயே சத்தம்போட்டுக்கொண்டிருப்பார் அம்மா. “என் பையனுக்கு ஆறு வயசாகிடுச்சு, இன்னும் பெட்லேயே யூரின் போயிடுறான்… அன்பா சொல்லியாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு ஒண்ணும் செய்ய முடியலை” என்று புலம்பும் பெற்றோர்கள் உண்டு. படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது, பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் ஒரு சாதாரண நிலைதான். பெரியவர்களுக்கு சில நோய்க் காரணிகளாலும், வயது முதிர்ச்சியாலும் இது ஏற்படும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை, நைட் டைம் இன்கான்டினென்ஸ் (Night time incontinence) அல்லது நாக்டர்னல் எனுரீசிஸ் (Nocturnal enuresis) என்பார்கள்.

தூக்கத்தில் தன்னையும் அறியாமல் சிறுநீர் கழிப்பதைத்தான் பெட் வெட்டிங் என்கிறோம். இது, எல்லா வயதிலும் ஏற்படக்கூடிய ஒன்று. என்றாலும், சிறு குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமே அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் வேறுபடும்.

சிறுநீர் வெளியேறும் அறிவியல்

நம் சிறுநீரகத்தில் இருந்து சிறு குழாய்கள் வழியே சிறுநீரானது சிறுநீர்ப்பையை வந்தடைகிறது. அது நிறைந்ததும் மூளைக்குத் தகவல் செல்கிறது. மூளை, சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பிறகே சிறுநீர் வெளியேறுகிறது. இந்த சிறுநீர்ப்பையானது இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தன்னிச்சையாகச் செயல்படும். சிறுநீர் மெதுவாக சிறுநீர்ப்பையில் வந்து சேர்ந்தவுடன், தானாகவே சிறுநீர்ப்பை சுருங்கி, சிறுநீரை வெளியேற்றும். பின், வயது அதிகரிக்கும்போது இதன் கட்டுப்பாட்டை மூளை எடுத்துக்கொள்ளும். இந்தச் செயல்பாடு மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகே, குழந்தைகளுக்குத் தாங்கள் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையைச் சொல்வார்கள். இவ்வாறு, பழக்கப்படுத்துவதையே கழிப்பறைப் பயிற்சி (டாய்லெட் ட்ரைனிங்) என்கிறோம்.

கழிப்பறைப் பயிற்சியை சில குழந்தைகள் மூன்று முதல் ஐந்து வயதுக்குள் பழகிக்கொள்வார்கள். ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் இரவு படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள். அதேபோல, பகலில் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும்போது சொல்வார்கள். ஐந்து வயது முதல் ஏழு வயது வரை உள்ள 90 சதவிகிதக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது இல்லை. ஏழு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதையே நாம் பெட் வெட்டிங் என்கிறோம்.

பெட் வெட்டிங் காரணங்கள்

பொதுவாக, குழந்தைகளுக்கு இட மாற்றம் ஏற்படும்போது அதாவது, பள்ளி, வசிப்பிடம் மாறும்போது, புதிய இடம், அறிமுகம் இல்லாத ஆட்கள், புதிய சூழலால் மனஅழுத்தத்துக்கு ஆளாவார்கள். இது ஒரு முக்கியமான காரணம். சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே கொஞ்சமும் கட்டுப்பாடு இல்லாமல், சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள். பிறவியிலேயே சிறுநீர்ப்பை சுருங்கி இருப்பதே இதற்குக் காரணம். இதனாலும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும். மேலும், மலச்சிக்கல், சிறுநீர்ப்பைத் தொற்று, சிறுநீர்ப்பை நிறைந்ததை உணர முடியாத நிலை, ஹார்மோன் சமச்சீரின்மை, ஸ்லீப் ஆப்னியா, டான்சிலைடிஸ், சிறுநீர்ப்பாதை மற்றும் நரம்பு மண்டல அமைப்பில் பிரச்னை உள்ளவர்களுக்கும் பெட் வெட்டிங் பிரச்னை இருக்கும்.

சிகிச்சை உள்ளதா?

குழந்தை அடிக்கடி பெட் வெட்டிங் செய்கிறது என்றால், குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்வது நல்லது. இவர்களுக்கு சிறுநீர்ப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மற்றும் உளவியல் பரிசோதனை செய்யப்படும். 90 சதவிகிதக் குழந்தைகளுக்கு எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில், உணவுப் பழக்கத்தில் சிறிய மாறுதல் செய்தாலே போதும். இதனுடன், இரவு தூங்கச் செல்லும் முன்பு, சிறுநீர் கழித்துவிட்டு தூங்கும் பழக்கம், இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருக்கும் பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும். மேலும், குழந்தைகள் வளர வளர இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும். இதற்குப் பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இது குழந்தைகள் தங்களை அறியாமல் செய்வது என்பதால், அவர்களை திட்டுவதோ, அடிப்பதோ கூடாது. அவர்களைப் புரிந்துகொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டும். திட்டுவதாலோ அடிப்பதாலோ இந்தப் பிரச்னையை சரிசெய்துவிட முடியாது. இது, பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.

பெரியவர்களுக்கு ஏற்படும் பிரச்னை

சிலருக்கு, டீன் வயதுக்கு முந்தையப் பருவத்தில் இந்தப் பிரச்னை திடீனெத் தோன்றும். அதாவது, ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் வாழும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்குத் தோன்றும். முதியவர்களில் ஆண்களுக்கு பெட்வெட்டிங் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. 50 – 60 வயதில் இந்தத் தொந்தரவு ஏற்பட்டால், ப்ராஸ்டேட் பிரச்னையாக இருக்க வாய்ப்பு உள்ளது. ப்ராஸ்டேட் சுரப்பி சிறுநீர்பைக்கு கீழ் அமைந்திருக்கிறது. இதன் மையத்தில் சிறுநீர்க் குழாய் இருக்கிறது. ப்ராஸ்டேட் அளவு பெரிதாகும்போது, குழாய் சுருக்கம் அடையும். இதனால், சிறுநீர்ப் பாதையில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர்ப்பையில் தேக்கம் ஏற்படும். இவ்வாறு வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் தேங்குவதால் தொற்று ஏற்படும். அதனால், அவர்களையும் அறியாமல் தூக்கத்தில் சிறுநீர் வெளியேறும். மேலும், சிறுநீர்ப்பையில் கற்கள் தோன்றும். இதற்கு நவீன சிகிச்சைகள், தீர்வுகள் உள்ளன என்பதால் கவலைப்படத் தேவை இல்லை.

தவிர்க்க 10 வழிகள்

மாலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை குழந்தை அருந்தும் நீர் அளவைக் குறைக்க வேண்டும்.

காஃபின் உள்ள பானங்கள், உணவைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தை தூங்கச் செல்வதற்கு முன் சிறுநீர் கழிக்க அறிவுறுத்த வேண்டும்.

இரவில் சிறுநீர் வந்தால் எழுந்திருக்க வேண்டும் என்று அன்பாகச் சொல்ல வேண்டும்.

குழந்தை இரவில் விழித்தால் எழுந்திருக்க வசதியாக இரவு விளக்கை எரியவிட வேண்டும்.

இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் செட்செய்து குழந்தையை எழுப்பி, சிறுநீர் கழிக்கப் பழக்க வேண்டும்.

கழிப்பறைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

சிறுநீர் கழிக்காத நாட்களுக்குப் பாராட்டு தெரிவித்து, உற்சாகமூட்ட வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், சரிசெய்ய வேண்டும்.

சிறுநீர் கழித்தால் அடிக்கக் கூடாது. சருமத்தில் ஒவ்வாமை ஏதும் ஏற்படாமல் இருக்க, சுத்தம் செய்ய உதவ வேண்டும்.

Leave a Reply