பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.
பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்சனை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை சரி செய்ய எப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்..?
https://www.maalaimalar.com/health/women/pcos-polycystic-ovary-syndrome-symptoms-536658
https://www.maalaimalar.com/health/women/pcos-polycystic-ovary-syndrome-symptoms-536658
https://www.maalaimalar.com/health/women/pcos-polycystic-ovary-syndrome-symptoms-536658