பெண்கள் இரவில் உள்ளாடை அணியலாமா?

பெண்கள் இரவில் உள்ளாடை அணியலாமா?

பெண்களின் உள்உறுப்பில் அடிக்கடி பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதால் பெண்களின் உள்ளுறுப்புக்களில் காற்று பட வேண்டியது மிக மிக அவசியம். பெண்கள் வீட்டில் இருந்தாலும் வெளியில் சென்றாலும் உள்ளாடை அணியாமல் இருப்பது கொஞ்சம் சிரமம்தான் ஆனால் இரவில் தூங்கும் போது உள்ளாடை அணியாமல் இருக்கலாம் அல்லது அளவு பெரிதான உள்ளாடையை அணிந்து காற்று செல்லும் வகையில் இருக்கலாம்

பெண்கள் இறுக்கமான உள்ளாடையை அல்லது நைலான் கலந்த உள்ளாடையை அணிவதால் காற்று புகாமல் ஈரப்பதம் ஏற்பட்டு விடும். இதனால் பெண்ணுறுப்பில் பாக்டீரியா தாக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே முடிந்தவரை உள்ளாடை இல்லாமல் வெளிக்காற்று பெண்ணுறுப்பில் படும் வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரவிலாவது உள்ளாடை இல்லாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

காட்டன் கலந்த உள்ளாடையை அணிந்தால் மட்டுமே வெளிக்காற்று பெண்ணுறுப்புக்குள் செல்லும் என்பது முக்கியம். இரவில் உள்ளாடை அணிந்து தான் ஆக வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், காட்டன் உள்ளாடையை அணிந்து கொண்டால் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது

பெண்ணுறுப்பு சுத்தம் செய்ய தனியாக எதுவும் தேவையில்லை அது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும், ஆனால் அதை சுத்தம் செய்து கொள்ள வெளிக்காற்று அவசியம் என்பதை பெண்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்

Leave a Reply