பெண்கள் கழிவறைக்குள் திடீரென நுழைந்த ராகுல்காந்தி: குஜராத்தில் பரபரப்பு
குஜராத் மாநிலத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி திடீரென பெண்கள் கழிவறைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி கழிவறைக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் குஜராத்தில் கழிவறையில் ஆண், பெண் என குஜராத்தி மொழியில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ராகுல்காந்திக்கு குஜராத்தி மொழி தெரியாது என்பதால் தவறுதலாக அவர் பெண்கள் கழிவறைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் உடனே தனது தவறை புரிந்து கொண்டு உடனே வெளியே வந்து ஆண்கள் கழிவறைக்குள் சென்றார். இதை கவனித்துவிட்ட பத்திரிகையாளர்கள் பெண்கள் கழிவறைக்குள் ஏன் சென்றீர்கள் என்று கேட்டனர். ஆனால் அதற்குள் ராகுல்காந்தியை அவரது பாதுகாவலர்கள் அழைத்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.