பெண்கள் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை
காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று தெரியாது என்பீர்கள். காதலிப்பது தவறில்லை. ஆனால் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் காதலை எல்லா குடும்பத்திலும் ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே பெண்கள் தாங்கள் காதலிப்பதால் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வருமா? காலம் முழுவதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காதலருடன் குடும்பம் நடத்த முடியுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இப்போது காதலிக்கும் முன்னர் எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை பாருங்கள்.
1) முதலில் உங்களை பற்றி உணருங்கள்.
2) உங்கள் குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.
3) நம் குடும்பத்தில் காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள்.
4) நாம் காதலிக்க கூடிய நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5) அவருடைய குடும்பத்தை விசாரியுங்கள்.
6) காதலிக்க நினைக்கும் நபரிடம் தோழமையோடு பழகி அவருடைய நல்ல / கெட்ட விசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
7) நீங்கள் காதலிக்கும் நபரை பற்றி உங்கள் வீட்டில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கின்றதா என்று யோசியுங்கள்.
8) காதலிக்கும் நபர் விட்டு கொடுக்கும் மணம் இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.
9) நம் வீட்டில் உள்ளவர்கள் ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள்.
10) அடுத்தவர்கள் காதலிக்கிறார்கள் என்று நீங்கள் காதலிக்காதீர்கள்.
இவை அணைத்தும் சரியாக இருந்தால் நீங்கள் தாராளமாக காதலிக்களாம். நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால் தயவு செய்து காதலிக்காதீர். நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம் உங்களுக்கு மட்டும் இல்ல. உங்களுக்கும் கஷ்டம். நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்களை பெற்றவர்களுக்கும் கஷ்டம்.