கீர்த்தி சுரேஷின் அற்புதமான நடிப்பு
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கிய கதிரைப்படம் பெண்குயின். இந்த திரைப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு கிடைத்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி என்பதை தற்போது பார்ப்போம்
கீர்த்தி சுரேஷ் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணாகவும் கையில் ஒரு குழந்தை வைத்திருக்கும் ஒரு பெண்ணாகவும் அறிமுகமாகிறார். அவர் எதனால் விவாகரத்து பெற்றார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் காட்சி விளக்கம் அளிக்கிறது. மேலும் திடீரென அவருடைய குழந்தை காணாமல் போகிறது. அந்த குழந்தை எதனால் காணாமல் போகிறது? கடத்தியவர் யார் என்ற டுவிஸ்ட் இந்த படத்தில் உள்ளது
மேலும் கீர்த்தி இரண்டாவது திருமணம் செய்து கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் திடீரென அவருக்கு காணாமல் போன குழந்தை கிடைக்கிறது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சியில் இருக்கும் போது திடீரென அந்த குழந்தையை கடத்தியவர் மீண்டும் அந்த குழந்தையை பின்தொடர்வது போன்று கீர்த்தி சுரேஷ் உணர்கிறார். இதனை அடுத்து குழந்தையை கடத்தியவர் யார்? எனவும், அவனை கண்டுபிடிக்கவும் கீர்த்தி முடிவு செய்கிறார் அதன்பின் நடந்தது என்ன என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்
கிளைமாக்ஸ் முடிந்ததும் படம் முடிந்தது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்னொரு டுவிஸ்ட் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் கர்ப்பிணியாகவும் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் இருப்பினும் அவரது நடிப்பில் ஒரு சில காட்சிகளில் செயற்கைதனம் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. இந்த படத்தில் நடித்த கேரக்டரில் அனைவரும் தங்களுடைய கேரக்டரை புரிந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லிங்காவின் நடிப்பு சூப்பர். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி மிகச்சிறப்பாக தனது பணியைச் செய்துள்ளார். அனில் கிரிஷ் எடிட்டிங் மிகக் கச்சிதமாய் உள்ளது.
சந்தோஷ் நாராயணன் என்ற படத்தின் ஹீரோ என்று சொல்லலாம். பின்னணி இசையை அசத்தியுள்ளார். இயக்குனர் ஈஸ்வரின் இயக்கத்தில் இரண்டாவது பாதியில் பல இடங்களில் லாஜிக் மீறல்களை கவனிக்காமல் விடுவதால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை மேலும். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓகே என்றாலும் கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே இருப்பதால் அதில் ஆச்சரியம் ஏற்படவில்லை. இயக்குனர் இன்னும் கொஞ்சம் யோசித்து கிளைமாக்சை வேறுவிதமாக வைத்திருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. மொத்தத்தில் கீர்த்தி சுரேஷின் அற்புதமான நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் சிறப்பான பின்னணி இசை ஆகியவற்றுக்காக இந்த படத்தை பார்க்கலாம்
2.5/5