பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா திடீர் ராஜினாமா? முதல்வர் அதிர்ச்சி

பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா திடீர் ராஜினாமா? முதல்வர் அதிர்ச்சி

ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதால் டெல்லியில் ஆட்சி செய்து வரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அதிர்ச்சியில் உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குக் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி சட்டப்பேரவையில் நேற்று ஆம் ஆத்மி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை விரைவில் சபாநாயகரிடம் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply