பெண் போலீசார்களுக்கு கவர்ச்சி உடை: சர்ச்சையில் லெபனான் காவல்துறை

பெண் போலீசார்களுக்கு கவர்ச்சி உடை: சர்ச்சையில் லெபனான் காவல்துறை

லெபனான் நாட்டிலுள்ள ப்ருமன்னா நகர் போக்குவரத்து பெண் போலீசாரின் சீருடை அதிகபட கவர்ச்சியாக இருப்பதால் இந்த உடை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

லெபனான் நாட்டின் சாலை போக்குவரத்தை சரிசெய்யும் பெண் போக்குவரத்து போலீசார், கருப்புகலர் சட்டையும் ஒரு சிறிய ஷாட்சும் அணிந்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் இவ்வாறு கவர்ச்சியான சீருடை மாற்றப்பட்டுள்ளதாக லெபனான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் அந்நாட்டின் சமூக ஆர்வல்ர்கள் இந்த உடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போக்குவரத்தை சீர்செய்யும் போலீசே இவ்வாறு கவர்ச்சி உடை அணிந்தால் அவரால் போக்குவரத்து மேலும் சீர்கெடும் என்று கூறியுள்ளனர். உடனடியாக அரசு அவர்களுக்கு நல்ல சீருடையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply