பெப்சிகோ நிறுவனத்தில் இருந்து விலகுகிறாரா இந்திரா நூயி?

பெப்சிகோ நிறுவனத்தில் இருந்து விலகுகிறாரா இந்திரா நூயி?


அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய நியூயார்க் நகரில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனம் பெப்ஸிகோ. இந்த நிறுவனத்தில், இந்திரா நூயி கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதில் கடந்த 12 ஆண்டுகளாக சி.இ.ஓ.எனப்படும் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்த அவர், அப்பொறுப்பில் இருந்து தற்போது விலக முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது சி.இ.ஓவாக இருக்கும் அவருக்கு பதிலாக, தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக உள்ள ரமோன் லகுவார்ட், சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுட்த்ஹு புதிய சி.இ.ஓ., வரும் அக்டோபர் 3ஆம் தேதி பொறுப்பு ஏற்கிறார். அதேநேரம் இந்திரா நூயி, அந்நிறுவனத்தின் தலைவராக வரும் 2019ஆம் ஆண்டு வரை இருப்பார் என நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திரா நூயி,நிறுவனத்துக்கான தனது பணிகளை எண்ணி பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

https://twitter.com/IndraNooyi/status/1026431758798151680

Leave a Reply