பெரியாருக்கு எதிராக இளைஞர்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி! ரஜினி காரணமா?

பெரியாருக்கு எதிராக இளைஞர்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி! ரஜினி காரணமா?

பெரியார் ஒரு மாபெரும் தலைவர் என்ற ஒரு மாயத்தை இதுவரை திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்திருந்த நிலையில் அந்த மாயபிம்பம் தற்போது தகர்த்து எறியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரஜினியின் ஒரே ஒரு நிமிட பேச்சுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது பெரியார் என்றாலே மூடநம்பிக்கை ஒழிப்பு கொள்கை உடையவர் என்று மட்டும் தான் இன்றைய இளைஞர்களுக்கு தெரியும். ஆனால் இந்து கடவுள்களை அவர் அவமரியாதை செய்தது ராமர் சிலையை நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் சென்றது, இந்து இந்து கடவுள்களை மட்டுமே குறிவைத்து தாக்கியது, அதேபோல் ஒரே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டுமே அவர் தாக்கி பேசியது, கடவுள் மறுப்பு கொள்கையை உடைய பெரியார் வேறு எந்த மதத்தின் கடவுளையும் தாக்கி பேசாதது ஆகியவை ரஜினியின் ஒரே ஒரு ஒரே ஒரு நிமிட பேச்சின் மூலம் என்று இளைஞர்களுக்கு தெரியவந்துள்ளது

இதனை அடுத்து பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் இந்து மதத்துக்கு எதிராக என்னென்ன கொள்கைகளைப் பரப்பினார் என்பது குறித்து அறிய ஆவலுடன் இணையதளங்களில் பெரியார் குறித்து பல இளைஞர்கள் தேடி வருகின்றனர்

இதனை அடுத்து இதுவரை பெரியார் என்ற மாய பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருவதாக கூறப்படுகிறது ரஜினி பேசிய இந்த விஷயத்தை பெரியார் ஆதரவாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் இந்த அளவுக்கு இந்த பிரச்சனை பெரிதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply