பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.

கடந்த 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நேற்று நடைபெற்ற ஊதிய முரண்பாடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பாக உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கடந்த 24ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தின்போது சுமார் 300 ஆசிரியர்கள் வரை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply