பேட்டிங், பவுலிங் அபாரம்: தொடரை வென்றது இந்தியா
திருவனந்தபுரத்தில் இன்று நடந்த 3வது மற்றும் இறுதி டி-20 போட்டியில் அபாரமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது.
மழை காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே 17 ரன்களும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களும் எடுத்தனர்.
48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்துவீச்சில் திணறியது. இறுதியில் 8 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 61 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மேலும் ஒரு தொடரை கைப்பற்றியுள்ளது.