பேனர் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை காற்றில் பறக்க விட்ட பாஜக

பேனர் விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பை காற்றில் பறக்க விட்ட பாஜக

உயிருடன் இருக்கும் தலைவர்களின் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் ஆகியவற்றுக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஏற்கனவே இந்த தடையை எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவில் அதிமுக மீறி வரும் நிலையில் தற்போது பாஜகவும் மீறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பேனர்களின் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட உயிருடன் இருப்பவர்களின் பேனர்கல் உள்ளது.

மத்தியில் ஆளும் அரசும், மாநிலத்தில் ஆளும் அரசும் நீதிமன்ற தீர்ப்பை காற்றில் பறக்கவிட்டால் மற்ற கட்சிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

Leave a Reply