பேராசிரியை நிர்மலாதேவிக்கு மனநல சிகிச்சையா?
கல்லூரி மாணவிகளுக்கு தவறான வழி காட்டியதாக கைதான பேராசிரியை நிர்மலாதேவி, சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, மனநிலை சரியில்லாதவரைப் போன்று நடந்து கொண்டார்.
இந்த நிலையில், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 தினங்களாக, மனதை திடப்படுத்தவதற்காக தியான முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதால் யாரும் தொந்தரவு செய்யாத வண்ணம் தனியிடத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.