பேருந்து கட்டணம் உயர்கிறதா? பொதுமக்கள் அதிர்ச்சி

பேருந்து கட்டணம் உயர்கிறதா? பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் விரைவில் பேருந்து கட்டணம் உயரும் என்று கூறப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வெள்ளை போர்டு பேருந்துகளில் ரூ.3 குறைந்த கட்டணமாக இருக்கும் நிலையில் இனி ரூ.5 ஆக உயரும் என்றும் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் கட்டணம் உயரும் என்றும் அதிகபட்சமாக நகர பேருந்துகளில் ரூ.25ஆக கட்டணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே போக்குவரத்து கழக பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், புதிய பஸ்கள் வாங்க, பராமரிப்பு பணிகளை மேம்படுத்த போன்றவற்றை கவனிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே போக்குவரத்து துறைக்கு ரூ.2400 கோடி கடன் இருப்பதாக கூறப்படுவதால் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply